Canada_120-animated-flag-gifs
India_120-animated-flag-gifs
Sri-Lanka_120-animated-flag-gifs
Guyana_120-animated-flag-gifs
Great-Britain_120-animated-flag-gifs
Malaysia_120-animated-flag-gifs
Singapore_120-animated-flag-gifs
Mauritius_120-animated-flag-gifs
Germany_120-animated-flag-gifs
France_120-animated-flag-gifs
USA_120-animated-flag-gifs

வடஅமரிக்காவில் துர்க்கை அம்பாளின் உறைவிடம்

WC7J3537
board8
 

ஆலய முகவரி

Sridurka  Hindu Temple
(ரொறன்ரோ  ஸ்ரீதுர்க்காதேவி  அம்பாள் தேவஸ்தானம்
கனடாவில் பதிவு செய்யப்பெற்ற இலாபநோக்கற்ற
சமய தர்ம ஸ்தாபனம)

30 Carnforth  Road , Toronto, Ontario  M4A  2K7    CANADA.
Telephone :    (416) 759 9648          Fax : (416) 751 7939
Email : pray@durka.com

namaste-3-manos-3-transparente

நிதிஉதவி நல்குவீர்

Cheque / Money Order payable to Sridurka Hindu Temple

Sridurka Hindu Temple,
30 Carnforth Road, Toronto,
Ontario,  M4A 2K7
Canada.

Remit to our Bank  :
TD Canada Trust
 A/c # Branch  No: 0192
 Account No. 7600-5227519

.................   OR  ................. 

.................   OR  ................. 

paypal-logo

(Contributions are Tax Deductible in Canada)

பக்தி

மனதுக்கு அமைதி

Amman-Ther-ekuruvi-SKP--2-

© Copyright 2018 - 2019  Sridurka Hindu Temple

பிறந்தநாள் பூஜை, திருமணநாள் பூஜை, தினவழிபாடு உபயம் போன்ற விபரங்களை அறிய ஆலய கருமபீடத்தை அணுகவும்.

80da4607
WC7J3568_1
tile9_1
tile9_1
namaste-3-manos-3-transparente

அண்மைய நிகழ்வுகள் - வீடியோ பதிவு

அபிஷேக நேர விபரம்

காலை நேர அபிஷேக நேரங்கள்
தினமும
 காலை 8.30 மணி


மாலை நேர அபிஷேக நேரங்கள்
தினமும் : மாலை 6.30 மணி

அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்விக்க விரும்புவர்கள் முதலில் ஆலயத்துக்கு அழைத்து பதிவு செய்து கொள்க. அபிஷேகம் குறித்த நேரத்தில் ஆரம்பிமாகிவிடும்
.

ஆலயம் திறக்கும் நேரம்

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 8:00 மணி
முதல் பகல் 1:00 மணி வரை
மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சனி, ஞாயிறு தினங்களில்
காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை
மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை
பகல் 1 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆலயம் மூடப்பட்டிருக்கும்
(விழாக்காலத்தில் நேரம் வேறுபடும

அறந்தான் நிலைக்க அரனவன் துணையாகி
மறந்தார் மனத்தையும் மாசறவைத்து வல்வினையால்
பிறந்தார் பிணிநீக்கிப் பேரருள் சுரந்திங்கு
ரொறன்ரோப் பதிஉறையும் துர்க்கையைப் போற்றுவாம்

ஆரம்ப பூஜை :
காலை 8.30 மணி

காலை பூஜை :
காலை 9.30 மணி

பகல் பூஜை :
பகல் 12.00 மணி

மாலை பூஜை :
மாலை 6.00 மணி

இரவு பூஜை :
இரவு 7.31 மணி

நிறைவு பூஜை :
இரவு 9.00 மணி

பூஜை நேரங்கள்

பெண் தெய்வ வழிபாடு இந்துசமயத்தில் முதன்மையானது. அன்னையைத் தெய்வமாக வழிபடுவதும், தெய்வத்தை அன்னையாக வழிபடுவதும் நம் பண்பாடாகவே வளர்ந்திருக்கிறது. தமிழர்களின் இலக்கியங்களில் தமிழர்கள் வழிபட்ட பெண்தெய்வம் பல பெயர்களில் அழைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கொற்றவை, கொல்லிப் பாவை, கானமர் செல்வி, கடல்கெழுசெல்வி போன்ற பெயரோடு விளங்கிய தெய்வத்தினை 'துர்க்கை' என்னும் பெயரோடு இக்காலத்தில் பலரும் வழிபட்டு வருகின்றனர்
. அம்பாளின் மிகப்பெரும் சக்தியை கனடாவில் நிலைகொள்ளச் செய்யவேண்டும் என்பதற்காக, இந்து சமயத்தில் வகுக்கப்பெற்றுள்ள சாஸ்திர சம்பிரதாயங்களின்படி அமைந்த ஸ்தலமாக துர்க்கேஸ்வரம் உருவாக்கப்பெற்றிருக்கிறது. ஆலயம் அமைவதற்குரிய இடத்தினை தீர்மானிக்கும்போது (கர்ஷணம்) இட அமைவுகள் நுட்பமாக ஆராயப்பட்டது. மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்படும்போது, மிக உத்தம பட்சமாக 33 ஹோமகுண்ட மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது. யந்திர பூஜை, யாகபூஜை, மண்டலாபிஷேக பூஜை 108 தினங்கள் நிகழ்த்தப்பெற்றது. 50க்கும் மேற்பட்ட குருமார்கள் உலகெங்கிலும் இருந்து வருகை தந்து வேதம் ஓதி ஆரம்பித்து வைத்த ஸ்தலம் இது.

 உலக இயக்கத்தில் இறைவன் சிவன் என்னும் ஆணுருவாகவும், சக்தி என்னும் பெண்ணுருவாகவும் இருப்பது போல் சிவசக்தி என அர்த்தநாரீஸ்வர உருவில் இருப்பதையும் வேதாந்த, சித்தாந்த நூல்களும் புராணங்களும் எடுத்துரைக்கின்றன. அவ்வகையிலேயே தமிழர்களின் வழிபாட்டுப் பாரம்பரியங்களும் அமைந்திருக்கின்றன. சிவனுடைய ஆலயங்களில் சிவனோடு அமர்ந்திருக்கும் அம்பாளை முன்னிலைப்படுத்தி தனிக்கோவில்கள் அமைக்கும் வழமையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே ஆரம்பித்துவிட்டது. தமிழர்களின் பண்பாட்டில் பிரதான இடம் பெறும் மதுரையில் அமைந்த மதுரை மீனாட்சி இதற்கு சான்றாகும். தற்காலத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளில் அம்பாள் வழிபாடு முதன்மை வகிப்பது அதை உறுதி செய்கிறது. அண்மைக் காலங்களில் தமிழர்கள் குடிபெயர்நத நாடுகளிலும் அம்மன் ஆலயங்கள் பல அமைந்திருக்கின்றன. அவற்றில் துர்க்கேஸ்வரம் சக்திபீடம் என்னும் தன்மை கொண்ட மிகப்பெரும் அருட்சக்தி வாயந்த ஆலயமாக உருவாகியிருக்கிறது.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு யாகங்களையும் ஹோமங்களையும் இவ்வாலயம் நிகழ்த்தி வருகிறது. கோடி அர்ச்சனை, நவகோடி அர்ச்சனை, சகஸ்ர மஹா சண்டிஹோமம், காயத்திரி மஹாமந்ர ஹோமம் போன்றவை இதுவரை நடைபெற்றுள்ளன. இவ்வாலயம் உருவாகியது முதல் இன்று வரை அம்பாளின் அருட்சக்தியால் பெரும்பேறுகளை அடைந்தவர்கள் பலர். 'தாய்க்கோவில்', 'அற்புதக் கோவில்' என இந்துக்கள் கொண்டாடும் ஆலயமாக இது பரிணமித்துள்ளது.

தற்போது நடைபெறும் இராஜ கோபுரத் திருப்பணி விபரம்

064-001
GOPURAM1

இராஜகோபுரம் தற்போதய தோற்றம் - நிர்மாணப் பணி

இராஜகோபுரம் திருப்பணி பூர்த்தியின் பின்னர் தோற்றம்

கோபுரம் கட்டுவதில் பங்கேற்பதன் பலன்

'அங்கண்மா ஞாலம் தன்னில் கல்லினால் செய்வித்தோர்கள்
கயிலைவிட்டு அகலார் அன்றே'

கருத்து:
திருக்கோவிலை கல்லினால் கட்டுவதற்கு திருப்பணி நிதி நல்குபவர்களுக்கு இறைவனின் திருவருள் என்றும் நீங்காது இருக்கும்

இறைவனின் வாசஸ்தலமதாக விளங்கும் கோவிலை உருவாக்குவதில் மூவரின் பங்கு உண்டு
1. கோவிலை கட்டும் சிற்பிகள்
2. கோவிலை உருவாக்கிவரும் ஆலய நிர்வாகம்
3. கோவிலை கட்டுவிக்க திருப்பணி நிதி நல்கும் பக்தர்

இவர்களுள் திருப்பணி நிதி நல்கும் பக்தர்களே ஆணிவேர். தன்னலம் கருதாமல் இறைவனுக்கு ஒரு இல்லம் அமைத்திட தம்மால் இயன்றவரை உதவிடும் நல்உள்ளங்கள்: நமக்கென்று ஒரு வீடு கட்டினால், நாம் இல்லாத காலத்தில் இவற்றால் நமக்கு எவ்வித பயனும் இல்லை. ஆனால் கடவுளுக்கு கோவில் கட்டும்போது, அதன் பயன் எங்களின் அத்தனை பிறப்புக்கும் தொடர்கிறது.

சைவசமயம் கூறும் அனைத்தையும் உரிய முறையில் செய்து வருவது துர்க்கேஸ்வரம் என்பதை பக்தராகிய நீங்கள் அறிவீர்: உயரிய மஹாகும்பாபிஷேகத்தை செய்தது துர்க்கேஸ்வரம் என்பதை நீங்கள் அறிவீர்: பெரும் ஹோமங்களையும் யாகங்களையும் செய்தது துர்க்கேஸ்வரம் என்பதையும்  அறிவீர். உலகத்திலேயே பல ஆலயங்கள் செய்ய நினைக்காத நவகோடி அர்ச்சனை போன்ற விஷேட வழிபாடுகளை நிகழ்த்தியதும் இவ்வாலயம் என நீங்கள் அறிவீர். முறைப்படியாக ஒரு ராஜகோபுரத்தை இவ்வாலயம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் பக்தராகிய நீங்கள் அறிவர்.

அம்பாளில் ஆலயத்தை உருவாக்க நாம் கேளாமலே திருப்பணியேற்ற உங்கள் அனைவருக்கும்; துர்க்கேஸ்வரம் ஆலயம் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. அம்பாள் உங்களுக்கு அனைத்துப் பேறும் தருவாள்.

கோபுரத் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், நிதிப் பற்றாக்குறையில் வேலைகள் ஸ்தம்பித்திருக்கும் இவ்வேளையில் எமது நிலமையை உங்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். உங்களால் இயன்றதை வழங்கி எம் அம்பாளின் கோபுர திருப்பணியை நிறைவேற்றிட முன்வருக

அற்புதங்களை நிகழ்த்தும்
துர்க்கேஸ்வரம்

அருட்சக்தி மிக்க அம்மன் குடியிருக்கும்
துர்க்கேஸ்வரம

மகோற்சவத் திருவிழா
பிள்ளையார் அலங்காரத் திருவிழா
முருகன்  அலங்காரத் திருவிழா

மாத சதுர்த்தி
மாத கார்திகை விரதம்
மாத சங்கடஹர சதுர்த்தி
மாத வைரவர் அஷ்டமி
சோடஷ மஹாலட்சுமி தீப பூஜை

திருவிளக்குப் பூஜை
கௌரி காப்பு பூஜை

ஸ்கந்தசஷ்டி விரத பூஜை
நவராத்திரி விரத பூஜை
திருவெம்பாவை பூஜை
அபிராமிப்பட்டர் விழா
மாசிமகம் பால்குடத் திருவிழா
தைப்பூசம் பால்காவடி

 

திருவிழா உபயம்

பக்தர்களின் நேர்த்திகள்

அர்ச்சனை
சகஸ்ரநாமம்

அபிஷேகம்
பால் அபிஷேகம்
ஸ்நபன அபிஷேகம்
ருத்திராபிஷேகம்
சங்காபிஷேகம் - 108
சங்காபிஷேகம் - 1008

ஹோமம்
கணபதி ஹோமம்
துர்க்கா ஹோமம்
ஸ்கந்த ஹோமம்
நவக்கிரக ஹோமம்
சனிப்பிரீதி ஹோமம்
குரு பரிகார ஹோமம்

சனிப் பெயர்ச்சி ஹோமம்
குருப் பெயர்ச்சி ஹோமம்
ராகுப் பெயர்ச்சி ஹோமம்

சாந்தி
களத்திர தோஷ சாந்தி
சர்ப்ப சாந்தி
நவக்கிரக சாந்தி

சடங்கு பூஜைகள்
பிரசாத பூஜை
அன்னப்பிரசாசனம்
உபநயனம்
வித்தியாரம்பம்
புத்திரதோஷ நிவர்த்தி
சிரார்த்தம்
பிறந்தநாள் வழிபாடு
திருமணநாள் வழிபாடு
வாகன பூஜை
அர்ச்சனை திருமணம்

TEMPLE HOURS

Sponsoring Abisegam and special rituals are by appointment only.

Please contact the office for further details

பூஜை நேரங்கள்



காலை பூஜை :
காலை 9.30 மணி

பகல் பூஜை :
பகல் 12.00 மணி

மாலை பூஜை :
மாலை 6.00 மணி

இரவு பூஜை :
இரவு 7.31 மணி

 

 

அபிஷேகம், விஷேட ஹோமம் செய்ய விரும்புபவர்கள் முற்கூட்டியே பதிவு செய்து, காலையிலோ மாலையிலோ செய்து கொள்ளலாம். விபரங்களை ஆலய அலுவலகத்தில் அழைத்துப் பெற்றுக் கொள்க.

அபிஷேக நேர விபரம்

MON

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

TUE

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

WED

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

THU

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

FRI

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

SAT

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

 

 

SUN

08:00 AM - 01:00 PM

 

05:30 PM - 09:00 PM

sridurka heading_tamil2